தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; 4 வாகனங்களுக்குத் தீவைப்பு

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் ஜெயஸ்வால் நெக்கோ தொழில் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆம்டாய் இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இங்கு இன்னும் உற்பத்தி தொடங்காதநிலையில், ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

இந்நிலையில் இந்த இரும்புத்தாது சுரங்க பகுதியில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட 4 வாகனங்களுக்கும் அவர்கள் தீவைத்தனர். தாக்குதலுக்குப் பின்பு, சுரங்கப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மாயமாகிவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு