தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு; நடிகா சுஷாந்த் சிங்கின் நண்பர் கைது

போதை பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பரை பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது மரணத்தை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இந்தி திரையுலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சுஷாந்தின் காதலி நடிகை ரியா உள்ளிட்ட பலர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பல முக்கிய நடிகைகளிடமும் போதைப்பொருள் வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடாபான போதைப்பொருள் வழக்கு விசாரணையின் போது, போதை பொருள் கும்பலுக்கும் சுஷாந்த் சிங்கின் நண்பரும், துணை இயக்குனருமான ரிஷிகேஷ் பவாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் துணை இயக்குனரின் வீட்டில் சோதனை நடத்தி செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரைபோதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு