Photo Credit: AFP 
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக பேஸ்புக் அதிகாரிகளுக்கு என்சிபிசிஆர் சம்மன்

ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக பேஸ்புக் அதிகாரிகளுக்கு என்சிபிசிஆர் சம்மன் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் குறித்த விவரங்களை வெளியிட்டதற்காக, ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ஏறத்தாழ ஒருவாரங்கள் கழித்து இன்றுதான் அவரது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிறுமியின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, ராகுல் காந்தியின் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை நடத்தும் பேஸ்புக்குக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

அதற்கு பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இதையடுத்து, பேஸ்புக் நிறுவன இ்ந்திய அதிகாரிகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள என்சிபிசிஆர் அலுவலகத்துக்கு பேஸ்புக் இந்தியா சார்பில் பிரதிநிதிகள் நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராகி ராகுல் காந்தி இன்ஸ்டாகிரம் கணக்கு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.