தேசிய செய்திகள்

சிர்சி அருகே போலீஸ் வேன் கவிழ்ந்தது; 5 பேர் படுகாயம்

சிர்சி அருகே போலீஸ் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கார்வார்;

கர்நாடகத்தில் தற்போது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் இருந்து சிர்சிக்கு பாதுகாப்பு பணிக்காக 8 போலீஸ்காரர்கள் போலீஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர். சிர்சி அருகே உள்ள தாராகோடா கிராமம் அருகே சென்றபோது திடீரென வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் போலீஸ்காரர்களான மடிவாலா பகுதியை சேர்ந்த பரமேஷ்வர், பெலகாவியை சேர்ந்த ராம்தீர்த்தா படுகாயமும், ராமச்சந்திரா, ரங்கநாத், ஷித்தல் ராமச்சந்திரா லேசான காயங்களும் அடைந்தனா. இதையடுத்து அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிர்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்