புதுடெல்லி,
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்தியாவில் குளிர்கால திருவிழாக்கள் வர தொடங்கி உள்ளன. டெல்லியில் உயர்ந்து வரும் மாசுபாடு அளவுகளால் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற சூழல் முதியவர் மற்றும் குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது என கூறியுள்ளார்.
அதனால் சுற்று சூழலை பாதிக்காத வகையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட மக்களுக்கு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடையே அமைதி மற்றும் சகோதரத்துவம் பாதிக்காத வகையிலும் இந்த அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.