தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு - இன்று நடைபெறுகிறது

நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்' என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு தள்ளிப் போனது. கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இளங்கலை மருத்துவ படிப்ப்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் 11 ஆம் தேதி கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (செப்டம்பர் 11) நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்