தேசிய செய்திகள்

ஒடிசாவில் வருகிற 20ந்தேதி நீட் தேர்வு; தேசிய தேர்வுகள் முகமை

ஒடிசாவில் பானி புயலால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வருகிற 20ந்தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், ஒடிசாவில் பானி புயலால் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

பானி புயல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கடந்த மே 3ந்தேதி கரையை கடந்தது. பானி புயல் காரணமாக ஒடிசாவில் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வருகிற 20ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை இன்று அறிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து