தேசிய செய்திகள்

ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியாலுக்கு முதல்-மந்திரி நவீன்பட்நாயக் கடிதம்

ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியாலுக்கு முதல்-மந்திரி நவீன்பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோன பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீட், ஜேஇ இ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக் மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது. மேலும் கொரோனா பரவல் நேரத்தில் இத்தகைய தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். மாணவர்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு