தேசிய செய்திகள்

‘நெப்ட்’, ‘ஆர்.டி.ஜி.எஸ்.’ மூலமான பண பரிமாற்றங்கள் - இன்று முதல் கட்டணம் குறைகிறது

‘நெப்ட்’, ‘ஆர்.டி.ஜி.எஸ்.’ மூலமான பண பரிமாற்றங்களுக்கு இன்று முதல் கட்டணம் குறைகிறது.

தினத்தந்தி

மும்பை,

ஒரு வங்கி கணக்கில் இருந்து எந்த ஒரு வங்கி கணக்குக்கும் நெட் பேங்கிங் மூலமாக பணம் அனுப்புவதற்கு நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். என 2 வழிமுறைகள் உள்ளன. இத்தகைய பணப்பரிமாற்றங்களுக்கு சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி, நெப்ட் மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு ரூ.5 வரையும், ஆர்.டி.ஜி.எஸ். மூலமான பரிமாற்றங்களுக்கு ரூ.50 வரையும் கட்டணம் வசூலிக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே டிஜிட்டல் பரிமாற்றங்களின் உத்வேகத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை அதிகமாக பயன்படுத்தும் வகையிலும் மேற்படி பரிமாற்றங்களுக்காக வங்கிகளிடம் இருந்து இதுவரை பிடித்து வந்த சிறிது தொகையை இன்று (திங்கட்கிழமை) முதல் ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது. அத்துடன் இந்த பணப்பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் வங்கிகளை கேட்டுக்கொண்டு உள்ளது.

இதன்மூலம் மேற்படி நெப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். மூலமான பண பரிமாற்றங்களுக்கான கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு வழி ஏற்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் மேற்படி பரிமாற்றங்களுக்கான கட்டணம் இன்று முதல் குறையும் நிலை உருவாகி இருக்கிறது. இதைப்போல ஏ.டி.எம். கட்டணங்கள் குறித்து மறு ஆய்வு செய்யவும் உயர்மட்டக்குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு