தேசிய செய்திகள்

நேதாஜியின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கும் - ராம்நாத் கோவிந்த்

நேதாஜியின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களில் முதன்மையானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் நேதாஜியையே சேரும்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் தனித்துவம் மிக்கவரும், வங்கத்துச் சிங்கம் என்றும், நம் மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படுபவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இந்நிலையில் நேதாஜியின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. சுதந்திர இந்தியா - ஆசாத் ஹிந்த் - என்ற தனது கடுமையான உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியது. அவரது லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து