புதுச்சேரி,
தமிழகம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இரு மாநில சட்டசபை தேர்தலிலும் விஜய் தலையிலான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது.
தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை தவெக தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு புதிய நிர்வாகக்குழு அமைத்து தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில்,
கழகத் தோழர்களுக்கு வணக்கம். புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.
இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு:
1. சையத் முகமது காசிம்
2. புதியவன்
3. சாமிநாதன் Ex. MLA
4. அசனா Ex.MLA
5. பெரியசாமி Ex.MLA
6. சந்திரன் Rid., IG.
7. வலந்தன்
8. நீரேஷ் குமார்
9. ராமு
10. மணிபாலன்
11. பிரதீபன்
12. பிரபு
13. ராஜசேகர்
14. சந்திரசேகரன்
15. சத்யா
16. செந்தில் குமார்
17. வசந்தராஜா
18. சரவணன்
19. சந்திரபாலன்
20. யூசப்
21. வேல்முருகன்
22 விஜி
23. சுகுமார்
24. பாரதிதாசன்
25. பிரான்சிஸ்
26. கிளார் பேட்ரிக்
27. மணிகண்டன்
28. குமரவேல்
29. பாலாசுதாகர்
30. பிரிஜேஷ்
எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச் செயலாளருடன் இணைந்து, இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழக நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள்.
தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.