தேசிய செய்திகள்

'புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்' - மத்திய சட்டத்துறை மந்திரி

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் புதிதாக 'பாரதிய நியாய சன்ஹிதா', 'பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா' மற்றும் 'பாரதீய சாக்ஷியா சட்டம்' ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த மூன்று சட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 21-ந்தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு டிசம்பர் 25-ந்தேதி இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை வரும் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய சட்டங்கள் தொடர்பாக அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்