தேசிய செய்திகள்

கவர்னர்களுக்கான படிகள் குறித்து புதிய அறிவிப்பு - மத்திய அரசு நடவடிக்கை

கவர்னர்களுக்கான படிகள் குறித்த புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநில கவர்னர்களின் மாத ஊதியம் மற்றும் படிகளை அந்தந்த மாநில அரசுகளே வழங்கி வருகின்றன. கவர்னர்களின் மாத ஊதியத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.3 லட்சமாக உயர்த்திய மத்திய அரசு, அவர்களுக்கான படிகளையும் உயர்த்தி தற்போது அறிவித்து உள்ளது.

அதன்படி கவர்னர்களுக்கான சுற்றுப்பயணம், விருந்தினர் உபசரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவின படிகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காள கவர்னர் ரூ.1.81 கோடி பெறுகிறார். அடுத்ததாக தமிழக கவர்னருக்கு ரூ.1.66 கோடியும், பீகார் கவர்னருக்கு ரூ.1.62 கோடியும், மராட்டிய கவர்னருக்கு ரூ.1.14 கோடியும் வழங்கப்படும்.

இதைப்போல கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கான செலவினம், பராமரிப்பு செலவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அலங்காரங்களை மாற்றுவதற்கு ரூ.80 லட்சமும், கொல்கத்தா, டார்ஜிலிங்கில் உள்ள கவர்னர் மாளிகைகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.72.06 லட்சமும் ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை