புதுடெல்லி,
மத்திய நீர்சக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பதவி வகிக்கும் அசோக் குமார், தூய்மை கங்கை தேசிய திட்டத்தின் புதிய பொது இயக்குனராக பொறுப்பேற்று உள்ளார்.
அவர் இந்திய ஆட்சி பணியில் கடந்த 1991ம் ஆண்டுக்கான பிரிவை சேர்ந்தவர். இதற்கு முன்பு அவர் விமான போக்குவரத்து மற்றும் ஆற்றல் அமைச்சகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
அவர், தூய்மை கங்கை தேசிய திட்டத்தின் செயல் இயக்குனராகவும் அவர் பதவி வகித்துள்ளார். அவரது மழைநீர் சேகரிப்பு பிரசாரத்தின் உதவியால் நாட்டில் 9.5 லட்சம் நீர் சேமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
2008ம் ஆண்டில் 30 லட்சம் பேர் ஐதராபாத்தில் குடிநீர் பெறவும், 2002ம் ஆண்டில் கலெக்டராக இருந்த அவர் நிசாமாபாத் மாவட்டத்தில், ஆயிரம் பள்ளி கூடங்களில் 1.4 லட்சம் கழிவறைகள் கட்டுவதற்கு ஆதரவாகவும் அவர் செயல்பட்டுள்ளார்.