தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்; முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்படுத்தப்பட உள்ளது என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகினர்.

இதனை முன்னிட்டு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களை சந்தித்து உரையாடினார். அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

இதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. மாணவ மாணவிகள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொண்டேன். கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை இன்று அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்து உள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை