தேசிய செய்திகள்

யுபிஐ செயலியில் அடுத்த ஆண்டு முதல் வருகிறது புதிய அம்சம்

புதிய அம்சம் ஒன்று யுபிஐயில் அறிமுகம் ஆக உள்ளது.

தினத்தந்தி

இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள்.

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடி மூலம் சில வினாடிகளில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வகை பரிவர்த்தனை வேகமாகவும் இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுபிஐ களில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்கும் விதமாகவும் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் புதிய அம்சம் ஒன்று யுபிஐயில் அறிமுகம் ஆக உள்ளது. இந்த வசதியின் படி, யுபிஐ வழியிலான ஆட்டோ பே (Auto Pay) களை பயனர்கள் பார்க்கவும், அவற்றை மேலாண்மை செய்யவும் முடியும். இதன்படி ஆட்டோ பே ஆப்ஷனை செயல்படுத்துவதை பயனர்கள் எளிதாக அறிந்து கொள்வதோடு, அவற்றை நிறுத்துவதும் எளிதாக இருக்கும் என்று பயனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து