தேசிய செய்திகள்

கேரளா நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் - முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கடந்த 7ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் சுமார் 80 பேர் மண்ணுக்குள் சிக்கினர். தற்போது வரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் அகமது மற்றும் உயரதிகாரிகள் உடன் சென்று நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து வெளியிட்ட பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில், மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலை அரசே ஏற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை