பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள குப்பி ரெயில் நிலையத்தில் இருந்து நிட்டூர் ரெயில் நிலையம் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அந்த பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் புதிய ரெயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு குப்பி ரெயில் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ளும் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இரட்டை ரெயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மந்திரிகள் ஜே.சி.மாதுசாமி, பசவராஜ் பொம்மை, குப்பி எம்.எல்.ஏ. சீனிவாஸ் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.