தேசிய செய்திகள்

குருவாயூர் கோவிலில் திருமண நிகழ்ச்சி நடத்த புதிய கட்டுப்பாடு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

குருவாயூர் கோவிலில் இனி வரும் நாட்களில் அரசின் அனுமதியுடன் மட்டுமே திருமண முன் பதிவு நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், புதுமனை புகுவிழா ஆகியவற்றிற்கு தடை இல்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்த 2 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இனி வரும் நாட்களில் அரசின் அனுமதியுடன் மட்டுமே திருமண முன் பதிவு நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு