தேசிய செய்திகள்

புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில்!

புழக்கத்தில் உள்ள பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என ஆர்.பி.ஐ. அதிகாரி கூறிஉள்ளார்

தினத்தந்தி

மும்பை,

புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிதிஆண்டின் இறுதி மாதமான மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியானது நிறைவு பெறும் அதனைத் தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இப்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும், எந்தஒரு இடையூறுமின்றி படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டின் உயரம் மற்றும் அகலத்தில் மாற்றம் இருக்காது எனவும், ஏடிஎம் வழியாக மக்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இப்போது ஏடிஎம்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம் வழியாக பொதுமக்களை சென்றடையவில்லை. மாறாக வங்கிகள் மூலம் சென்றடைகிறது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் மத்திய அரசு நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. டிசம்பர் மாதம் இனி அனைத்து நோட்டுக்களும் புதிய வடிவமைப்புகளுடனே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி புதிய நோட்டுக்கள் எல்லாம் புதிய வடிவமைப்புடன் வருகிறது. ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதும், நாடு முழுவதும் இருந்த ஏடிஎம்களில் புதிய நோட்டுக்களை வழங்கும் வகையில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றது. உயர் மதிப்புடைய நோட்டுக்களுக்கு எளிதாக சில்லரை கிடைக்கும் வகையில் 200 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் இப்போதும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க ஆர்வம் கொள்வது கிடையாது என வங்கி பணியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்