லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இன்று 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி, 8.15 சதவிகிதமும், பஞ்சாப் - 4.80 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்கள் விறுவிறுப்புடன் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக திருமணமான ஜூலி என்ற பெண் தனது மாமியார் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக பிரோசாபாத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று தன்னுடைய வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றி உள்ளார்.