புதுடெல்லி
2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலை படுத்தி காங்கிரஸ் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
ராகுல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக பல்வேறு சட்டசபை தேர்தல்கள் சந்திக்க வேண்டி உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் ரகசிய பக்கங்களை வெளீயிட தொடங்கி உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது ராகுல் காந்தி அடுத்த ஆண்டு பிரதமர் போட்டியாளராக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தாலும் மக்கள் அதை எப்படி பிரதிபலிக்கிறார்கள், அதைப் பற்றி உற்சாகமாக உள்ளார்களா? மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனபதை அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் மூலம் எங்கள் தேர்தல் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
"மற்ற கட்சிகளுடன் கூட்டணிக் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக செயல்படும் பல சமரசங்கள் உள்ளன. ராகுல் காந்தி பிரதமராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், இந்த யோசனை வெகுவாக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என கூறினார்.
மோடியை போல் ராகுல் காந்தியை ஏற்று கொள்வார்களா? அல்லது ஒருங்கிணைக்கபட்ட எதிர்க்கட்சித் தலைவரா அவர் வழிநடத்திச் செல்வாரா? அதற்கேற்ப உத்யோகபூர்வ பிரசாரம் அதற்காக வடிவமைக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி, அடுத்த பிரதமர் ராகுல்காந்தி, என 'Rahul Gandhi As Next PM of India', 'RG Next PM of India', 'Next PM RG' among others, பல பெயர்களில் அளவில் பேஸ்புக் பக்கங்கள் ஏற்படுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சி தெண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களால் நடத்தப்படும் இந்த பேஸ் புக் பக்கங்களால் கிடைக்கும் தகவல்கலை வைத்து கட்சி தங்களின் கருத்துகளை வழங்கும்.
இது போல் 2 க்கும் மேற்பட்ட பக்கங்கள் ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களால் ஏற்படுத்தபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக ஊடக குழு அல்லது கட்சியின் வியூக குழுக்கள் இப்போது வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்காக இணைக்கபட்டு உள்ளன.