தேசிய செய்திகள்

ஐ.எஸ். வழக்கு: ஆயுதங்களை சப்ளை செய்ததாக 21 வயது இளைஞரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது

ஐ.எஸ். வழக்கில் ஆயுதங்களை சப்ளை செய்ததாக 21 வயது இளைஞரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

புதுடெல்லி,

வடஇந்தியாவில் ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற புதிய பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தெரிய வந்தது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் கவரப்பட்ட அதன் ஆதரவாளர்கள் இந்த அமைப்பை தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ.வுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதனையடுத்து டெல்லி, உத்தரபிரதேசத்தில் அதிரடி சோதனையை நடத்திய தேசிய புலனாய்வு பிரிவு 10 பேரை கைது செய்தது.

வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்கு இந்த இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பேது பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக நாயிம் என்ற 21 வயது இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பு மீரட்டில் கைது செய்துள்ளது. பயங்கரவாத அமைப்பினர் தாக்குதலை முன்னெடுப்பதில் மிகவும் தயார் நிலையில் இருந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...