இவர்கள் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டியிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக ஜம்முவில் வழக்கு பதிவு செய்ததுடன், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது குறித்து விசாரணையும் நடத்தி வந்தனர். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேற்று இரு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். இதில் முகமது அர்மான் அலி பீகாரிலும், இஷானுல்லா ஜம்முவிலும் கைது செய்யப்பட்டனர்.
இதன் மூலம் காஷ்மீரில் நடத்த இருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.