தேசிய செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட குழுவுடன் தொடர்புடைய 10 பேரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்தது

ஐ.எஸ். பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட குழுவுடன் தொடர்புடையை 10 பேரை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

புதுடெல்லி/லக்னோ,

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட குழு ஒன்று இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் தாக்குதலை நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது. ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற இந்த குழு தொடர்பாக கிடைத்த தகவலை கொண்டு தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிரடி சோதனையை நடத்தியது.

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. குழுவுடன் தொடர்புடைய 10 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அசிம் அருண் கூறியுள்ளார். இவர்கள் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஐந்து பேர் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழுவின் செயல்பாடு தொடர்பாக சந்தேகம் எழுந்ததை அடுத்து தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்துள்ளது.

இந்த பயங்கரவாத குழு கடந்த 6 மாதங்களாக செயல்பட்டுள்ளது, இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு