தேசிய செய்திகள்

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக காஷ்மீரில் 7 இடங்களில் என்ஐஏ சோதனை

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக காஷ்மீரில் 7 இடங்களில் தேசியப் புலனாய்வு பிரிவு சோதனை மேற்கொண்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டும் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து சோதனை, கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்நிலையில் எல்லை தாண்டிய வணிகத்துடன் தொடர்புடைய தொழில் அதிபர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் தேசியப் புலனாய்வு பிரிவு சோதனையை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு