தேசிய செய்திகள்

தொடர் குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு உதவ என்.ஐ.ஏ. குழு இலங்கை சென்றது

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு உதவுவதற்காக, என்.ஐ.ஏ. குழு இலங்கை சென்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இலங்கையில் கடந்த மாதம் 21-ந்தேதி, ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 மனித வெடிகுண்டுகள் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இலங்கை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

தமிழ்நாட்டில் கோவையை சேர்ந்த 7 பேர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது குறித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. அந்த 7 பேரிடம் இருந்துதான், இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹசிமின் வீடியோக்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தன.

அதில், கொழும்பில் மத வழிபாட்டு தலங்களிலும், இந்திய தூதரகத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று ஹசிம் கூறி இருந்தார். இதன் அடிப்படையில்தான், இலங்கைக்கு இந்தியா முன்கூட்டியே தகவல் அளித்தது.

ஜஹ்ரான் ஹசிம், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்ததும், தமிழக, கேரள இளைஞர்களை மூளைச்சலவை செய்ய முயன்றதும் இந்திய உளவு அமைப்புகளுக்கு தெரிய வந்தது.

எனவே, தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் உதவுவதற்காக, என்.ஐ.ஏ. குழு இலங்கைக்கு சென்றுள்ளது. ஐ.ஜி. அலோக் மிட்டல் தலைமையில் 2 பேர் அடங்கிய குழு சென்றுள்ளது. கோவை வழக்கை விசாரித்தபோது, தங்களுக்கு கிடைத்த தகவல்களை இலங்கை அதிகாரிகளிடம் என்.ஐ.ஏ. குழு பகிர்ந்து கொள்ளும் என்று தெரிகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு