தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை

கடந்த 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) எம்.பி. பவுசியாகான், மராட்டியத்தில் கடந்த 3 மாதங்களில் 766 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் எப்போது அரசுக்கு அன்பானவர்களாக மாறுவார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் பேசும் போது, விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் மராட்டியம் நாட்டிலேயே முன்னிலை வகிக்கிறது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.