தேசிய செய்திகள்

நிபா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது - கேரள சுகாதார மந்திரி பேட்டி

நிபா வைரஸ் தாக்குதல் கட்டுக்குள் உள்ளதாக கேரள சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கண்ணூர்,

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்து மாநில சுகாதார மந்திரி சைலஜா நிருபர்களிடம் கூறியதாவது:

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருடன் தொடர்பு உடைய ஏராளமானோர் சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்தது. நிபா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டாலும் அடுத்த மாதம் 2வது வாரம் வரை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.

கோழிக்கோட்டில் நிபா வைரசை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி மத்திய குழுவினர் தலைமையில் மாநில சுகாதாரம் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு சைலஜா கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு