தேசிய செய்திகள்

புதிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷிக்கு நீதிமன்றம் சம்மன்

புதிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்கீழ் நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் சம்மன் விடுத்தது.

தினத்தந்தி

மும்பை,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர்.

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது.

மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்திய விசாரணை முகமைகள் மேற்கொண்ட முயற்சியில் நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுத்தது. இதனையடுத்து மெகுல் சோக்ஷிக்கு எதிராக நடவடிக்கையையும் சிபிஐ தொடங்கியுள்ளது. இப்போது, இதில் முக்கிய நகர்வாக தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு இரு நோட்டீஸ்களை நீதிமன்றத்தில் சமர்பித்தது. நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷியை பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும், வழக்கில் தொடர்புடைய ரூ. 3,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து நிர்வ மோடி மற்றும் மெகுல் சோக்ஷி முறையே செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் விடுத்தது. பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையிலான சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதே சட்டத்தை இம்மாத தொடக்கத்தில் விஜய் மல்லையாவிற்கு எதிராக பயன்படுத்தியது, இப்போது விஜய் மல்லையா இந்தியாவிற்கு திரும்ப சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் வைர வியாபாரிகளின் அனைத்து சொத்துக்களையும், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸில் உள்ள சொத்துகள் உள்பட அனைத்தையும் பறிமுதல் செய்ய முடியும்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்