தேசிய செய்திகள்

இந்தியாவில் தயாரான ‘நிர்பய்’ ஏவுகணை 5-வது முறையாக சோதனை

இந்தியாவில் தயாரான ‘நிர்பய்’ ஏவுகணை, ஒடிசா மாநிலம் பால்சோரில் 5-வது முறையாக சோதிக்கப்பட்டது.

தினத்தந்தி

பால்சோர்,

நிர்பய் என்ற ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தயாரித்து உள்ளது. 300 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை பெற்ற இந்த ஏவுகணை கடந்த 2013-ம் ஆண்டு முதல் 4 முறை சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு முறை மட்டுமே சோதனை வெற்றியில் முடிவடைந்தது. இந்த நிலையில் ஒடிசா மாநிலம் பால்சோர் அருகே உள்ள சாண்டிபுர் கடற்கரை பகுதியில் நேற்று காலை 5-வது முறையாக நிர்பய் ஏவுகணை செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்த சோதனையின் தொடக்கம் வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்