புதுடெல்லி,
நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார்