தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தாய் மனு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் ஓடும் பஸ்சில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு இளம் குற்றவாளி தண்டனை முடித்து விடுதலையானார்.

மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அக்ஷய் குமார் என்பவர் தனது தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில், அக்ஷய் குமாரின் வழக்கை தள்ளுபடி செய்து, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என நிர்பயாவின் தாய் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த இருஸ்ரீ மனுக்களும் 17-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான வாரண்டை பிறப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டிலும் நிர்பயாவின் தாய் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு 18-ந்தேதி விசாரிக்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து