புதுடெல்லி
நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் 15 பேர் கொண்ட இக்குழுவை நிர்வகிப்பார். இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்கள் குறைந்த கூலி கொடுக்கக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை, முழு நேர வேலை வாய்ப்பு, தொழிலாளர் அதிகம் பயன்படக்கூடிய தொழில்களின் ஏற்றுமதியை பெருக்குவது போன்ற சவால்கள் குறித்து இந்தக்குழு ஆராயும்.
இந்தியாவில் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய தொழில்கள், தொழில் முனைவோர் உருவாகக்கூடிய சூழலை ஏற்படுத்துவதும் முக்கிய பணியாக இருக்கும்.
மேலும் இந்தியாவில் அமைப்பாக்கம் செய்யப்பட்ட தொழில்களில் வேலைவாய்ப்பை பெருக்குவது முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.