புதுடெல்லி,
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீகாரில் தற்போது அமைச்சராக நிதின் நபின் உள்ளார். பீகாரில் பாஜக வெற்றிக்கு முக்கிய நபராக இவர் இருந்த நிலையில், அவருக்கு பரிசளிக்கும் விதமாக இந்த பொறுப்பை பாஜக தலமை அளித்துள்ளது.
நிதின் நபின் யார்?
நிதின் நபின் பாட்னாவில் பிறந்தவர். தந்தை நபி கிஷோர் சின்ஹாவின் இறப்புக்குப் பிறகு முழு நேர அரசியலுக்கு வந்தவர். பீகாரின் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்.
அதுமட்டும் இன்றி அரசியலில் பாஜகவின் கூர்மையான வியூக வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பாஜகவுக்காக இளைஞர்கள் பலரை ஒன்று திரட்டியவர். .பிகாரின் பான்கிபூர் நகரத் தொகுதியில் 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும் நிதின் நபின் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது