தேசிய செய்திகள்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணை தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்; நிதீஷ் குமார் நடவடிக்கை

ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணை தலைவராக பிரசாந்த் கிஷோரை நிதீஷ் குமார் இன்று நியமித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக முதல் மந்திரி நிதீஷ் குமார் இருந்து வருகிறார். இக்கட்சியின் துணை தலைவராக பிரசாந்த் கிஷோர் இன்று நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் கட்சியின் 2வது மிக சக்தி வாய்ந்த நபராக செயல்படுவார்.

கிஷோர் பல கட்சிகளில் தேர்தல் செயல்திட்ட நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இவர் இணைந்துள்ளார். அவரது இந்த நியமனம், கட்சிக்கு உள்ள நிலையான ஆதரவினை கடந்து, சமூக பிரிவுகளை கட்சியானது சென்று அடைவதற்கு உதவும் என அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி கே.சி. தியாகி கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை