பட்னா
மாநில காவல்துறையினர் ரூ 5 கோடி வரை மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்ற அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார் நிதிஷ். இதை தான் கடந்த 5-6 வருடங்களாக கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அதிகாரத்தை மத்திய அரசு மாநில அரசிற்கு கொடுத்தால் பலரையும் கைது செய்ய முடியும் என்றார் நிதிஷ். நான் அமலாக்கத் துறையின் அதிகாரத்தை நீர்க்கச்செய்ய வேண்டும் எனக் கேட்கவில்லை. மாநில காவல்துறைக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டால் குற்றமிழைப்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க இயலும் என்று விளக்கினார் முதல்வர் நிதிஷ் குமார்.