Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதவி விலகுகிறாரா..? - ஐக்கிய ஜனதாதளம் விளக்கம்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதவி விலகுகிறாரா என்பது குறித்து ஐக்கிய ஜனதாதளம் விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரில், பா.ஜனதாவுடன் சேர்ந்து நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த இப்தார் விருந்தில் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அத்துடன், அதிகாரபூர்வ முதல்-மந்திரி இல்லத்தை காலி செய்து விட்டு, வேறு பங்களாவில் குடியேறினார். இதனால், அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதாக யூகம் எழுந்துள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் விளக்கம் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா கூறியதாவது:-

நிதிஷ்குமாரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து, 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டது. 2025-ம் ஆண்டுவரை பதவியில் இருக்க மக்கள் தீர்ப்பு அளித்தனர். எனவே, 2025-ம் ஆண்டுவரை நிதிஷ்குமார் பதவியில் இருப்பார். அவர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து