கோப்பு படம் 
தேசிய செய்திகள்

டெல்லியில் வீட்டுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்க தடை விதிக்கவில்லை: மத்திய அரசு

டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்க கூடாது என மாநில அரசிடம் நாங்கள் கூறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில், இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்ட நிகழ்ச்சிக்கு மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

ஆனால், ஆளுனர் 2 காரணங்களை சுட்டி காட்டி இந்த திட்டம் அமலாவதற்கு மறுப்பு தெரிவித்து அதனை நிராகரித்து விட்டார். அவற்றில் ஒன்று, இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மற்றொரு காரணம், இந்த வழக்கு பற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மாநில அரசு விரும்பியபடி மக்களுக்கு வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வினியோகம் செய்ய கூடாது என நாங்கள் கூறவில்லை. டெல்லிக்கு கூடுதல் ரேசன் பொருட்களை வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய நுகர்வோர விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு