தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை எறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகிறது. இந்த கமிட்டி கடந்த மே மாதம் 22-ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை நிர்ணயித்தது. ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை முறையே 4 சதவீதம் மற்றும் 3.35 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த வட்டி விகிதங்களில் இப்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே பழைய நிலையே நீடிக்கிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக பணவீக்கம் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி தற்போது இந்த வட்டி விகிதத்தை மாற்றவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

தேசிய வீட்டு வசதி வங்கிக்கு (என்.எச்.பி) ஏற்கனவே ரிசர்வ் வங்கி ரூ.10 ஆயிரம் கோடி நிதி அளித்து இருக்கிறது. இந்நிலையில் வீட்டு வசதிக் கடன்களை அந்த வங்கி அதிக அளவில் வழங்க ஏதுவாக மேலும் ரூ.5 ஆயிரம் கோடி வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதே போன்று நபார்டு வங்கிக்கும் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்