தேசிய செய்திகள்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - மத்திய அரசு அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொது வருங்கால வைப்புநிதி (பி.பி.எப்.), தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.) போன்றவற்றுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கிறது.

அந்தவகையில் நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டான ஜனவரி 1 முதல் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை பி.பி.எப்., என்.எஸ்.சி. உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமல் நீடிக்கும். மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பி.பி.எப்.-க்கான வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், என்.எஸ்.சி.க்கான வட்டி விகிதம் 6.8 சதவீதமாகவும் நீடிக்கும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்