தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் சார்பில் அஞ்சலக சிறுசேமிப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் அறிவித்து வருகிறது.

இதன்படி, ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. அதில், சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பழைய வட்டி விகிதமே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை