தேசிய செய்திகள்

இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்பட 7 விமான நிலையங்களில், இதுதொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 43 விமானங்களிலும், 9 ஆயிரத்து 156 பயணிகளிடமும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், யாருக்கும் வைரஸ் காய்ச்சல் தாக்கவில்லை என்பது நிரூபணமானது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT