தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - சுகாதாரத்துறை மந்திரி தகவல்

மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

கொரோனா இரண்டாவது அலை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. அப்போது திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது. பல இடங்களில் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கர்நாடகா, கோவா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகள் உயிரிந்தனர். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதற்கிடையில் கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் சாலைகளில் விழுந்து உயிரிழந்தது குறித்தும், மருத்துவமனைகளில் உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்தார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த ஒரு கொரோனா நோயாளியும் உயிரிழக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் பிரமாணப் பத்திரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். மருத்துவ நோக்கங்களுக்காகவும், தொழில்துறை பயன்பாட்டிற்காக 100% ஆக்சிஜனை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். மாநிலத்தில் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து