தேசிய செய்திகள்

ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப்மினார் வளாகத்தில் ஆய்வு செய்ய திட்டமா? மத்திய கலாச்சாரத்துறை மந்திரி பதில்

குதுப்மினார் கோபுரத்தின் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என்பது பற்றி மத்திய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஐதராபாத்,

டெல்லியின் மெஹரேலி பகுதியில் உள்ள குதுப்மினார் கேபுரம் புராதான சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்திய தெல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தரம்வீர் சர்மா புதிய சர்ச்சையை கிளப்பினார். அதாவது டெல்லி குதுப்மினார் கேபுரம் குத்புதீன் ஐபக் கட்டவில்லை. இந்த கேபுரத்துக்கும் அருகே உள்ள மசூதிக்கும் எந்த தெடர்பும் இல்லை.

மாறாக இந்த கேபுரத்தை இந்து மன்னரான விக்ரமாதித்யா கட்டினார். சூரியனின் நகர்வை கண்டறியும் வகையில் 25 அங்குலம் சாய்த்து இந்த கேபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார். இது பெரும் விவாதப்பெருளானது.

இந்த சர்ச்சையை தெடர்ந்து குதுப்மினார் கேபுரத்தின் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தெல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என்பது பற்றி மத்திய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

குதுப்மினார் வளாகத்தை அகழ்வாராய்ச்சி தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.குதுப்மினார் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி ஏதும் நடத்தப் போவதில்லை என்று மத்திய கலாச்சாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி இன்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை