தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை - கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா

கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற 7-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வு செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

அதே நேரத்தில் மத்திய உள்துறையும், கர்நாடகத்தில் கொரோனா பரவல் இருப்பதால் அடுத்த மாதம் (ஜுன்) 30-ந் தேதி ஊரடங்கை நீட்டிப்பதுடன், கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படும்படி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் வருகிற 7-ந் தேதி வரை கொரோனா ஊரடங்கில் எந்த தளர்வும் செய்யப்படாது. தற்போது உள்ள நிலையே தொடரும். வருகிற 7-ந் தேதிக்கு பின்பு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபற்றி ஆலோசித்து 7-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது