representational Image:PTI 
தேசிய செய்திகள்

என்.ஆர்.சி-யை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம்

என்.ஆர்.சி. கணக்கெடுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடந்தேறின.

தினத்தந்தி

புதுடெல்லி,

அசாம் மாநிலத்தில் சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு என்னும் என்.ஆர்.சி. தயாரிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இதன் இறுதி விவரங்களின்படி மாநிலத்தில் 19 லட்சத்துக்கு மேற்பட்டோர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருந்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மேற்படி என்.ஆர்.சி. கணக்கெடுப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடந்தேறின.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது வரை, தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், குடியுரிமை சட்டம் 1955-ன்படி தடுப்புக்காவல் மையங்கள் அமைக்க எந்த வழிமுறையும் இல்லை எனக்கூறினார். அதேநேரம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் உள்ளூர் தேவைகளுக்காக இந்த மையங்களை அமைத்துள்ளன எனவும் அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்