தேசிய செய்திகள்

பொருளாதார புரிதலே இல்லை: ராகுல் காந்தி மீது பியூஸ் கோயல் பாய்ச்சல்

விவசாய நலன்களையும் தேசிய வளர்ச்சியையும் பாதுகாப்பதில் மோடி உறுதியாக உள்ளார் என்று பியூஸ் கோயல் கூறினார்.

மும்பையில் இன்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ராகுல் காந்தி ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகிறார். விவசாயிகளின் நலனை இந்த அரசு முழுமையாக பாதுகாக்கிறது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரம்பற்ற இறக்குமதிகளை அரசு அனுமதிக்கவில்லை. தற்போதுள்ள இறக்குமதி அளவை விட குறைவான ஒதுக்கீட்டை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளோம். பிரதமர் மோடி தொடர்ந்து விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். விவசாய நலன்களையும் தேசிய வளர்ச்சியையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.