தேசிய செய்திகள்

“வெற்று பேச்சுகள் வேண்டாம், நாட்டுக்கு தீர்வை கொடுங்கள்” - ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு

இந்தியாவில் கொரோனா தொற்று திடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலகம் கண்டிராத ஒரு நாள் உச்சத்தை நேற்று இந்தியாவில் கண்டிருக்கிறது. இந்த தருணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

கண்டிப்புடனான வாசகங்களை கொண்ட அந்தப் பதிவில் அவர், நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். தொடர்ந்து சோகமான செய்திகள் வருகின்றன. இந்தியாவில் நெருக்கடி கொரோனாவால் மட்டுமல்ல, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் ஏற்படுகிறது. தவறான கொண்டாட்டங்களோ, வெற்று பேச்சுகளோ வேண்டாம். நாட்டுக்கு தீர்வை கொடுங்கள் என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்