தேசிய செய்திகள்

விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி மத்திய அரசு பரிசீலிக்கவில்லை: அருண் ஜெட்லி திட்டவட்டம்

விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மராட்டிய, உத்தர பிரதேசம் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு நாடு முழுவதும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய முன்வருமா? என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

ஆனல், விவசாயக்கடன்கள் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:- "விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு யோசனை மத்திய அரசிடம் இல்லை. மாநில அரசுகளின் விவசாயக் கடன் ரத்து அறிவிப்பு தொடர்பாக நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. நிதிப் பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் இருக்கிறது.

ஏற்கெனவே மத்திய அரசின் நிலைப்பாட்டை நான் தெரிவித்துவிட்டேன். விவசாயக் கடன்களை ரத்து செய்யும் மாநில அரசுகள் அதற்கான நிதி ஆதாரங்களை அவர்களேதான் திரட்டிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது" என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்